
ஷா ஆலாம், மார்ச்-30-உயர் கல்விக் கூட படிப்புக்கான உதவித்தொகை விண்ணப்பங்களை சிலாங்கூர் அரசாங்கம் மீண்டும் திறந்துள்ளது.
இந்த விண்ணப்பங்கள் ஏப்ரல் 14 வரை ஏற்றுக்கொள்ளப்படும் என, மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி இன்று அறிவித்தார்.
இம்முயற்சி, சிலாங்கூரில் பிறந்த மாணவர்களின் மேற்படிப்புக்கான நிதிச்சுமையைக் குறைக்க உதவும் என்றார் அவர்.
இத்திட்டத்தின் கீழ், மாநில அரசு அங்கீகரித்த உயர் கல்விக் கூடங்களில், சான்றிதழ் நிலை 4 முதல் இளங்கலைப் பட்டப் படிப்பு வரை முதலாமாண்டில் படிக்கும் மாணவர்களுக்கு RM1,000 நிதியுதவி வழங்கப்படும்.
“கடந்தாண்டு RM3 மில்லியன் மட்டுமே ஒதுக்கப்பட்ட நிலையில், மேலும் ஏராளமான மாணவர்கள் பயன்பெறும் நோக்கில், இவ்வாண்டு இதற்காக RM5 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது”, என அமிருடின் கூறினார்.
https://danapendidikan.selangor.gov.my என்ற இணைய அகப்பக்கத்தில் விண்ணப்பங்களை செய்யலாம்.



