
மணிலா, ஏப்ரல்-10, பிலிப்சின்சில் சில தினங்களுக்கு முன்னர் வெடித்துச் சிதறிய கன்லாவோன் (Kanlaon) எரிமலைக்கு அருகாமையில், அனைத்து வகையான சுற்றுலா நடவடிக்கைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
பொது மக்கள் மற்றும் சுற்றுப்பயணிகளின் பாதுகாப்புக் கருதி அந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மலையேறல், அருகிலுள்ள சுற்றுலாத் தலங்களுக்கான வருகை ஆகியவையும் தடைச் செய்யப்பட்டுள்ளன.
வெளிநாட்டு சுற்றுப்பயணிகள் நிலைமையைப் புரிந்து நடந்துகொள்வார்கள் என எதிர்பார்ப்பதாக உள்ளூர் அதிகாரத் தரப்பு கூறியது.
எனினும் இதுவரை சுற்றுப்பயணிகள் எவரும் சம்பவ இடத்தில் சிக்கிக் கொண்டதாக தகவல் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த சக்தி வாய்ந்த எரிமலை மீண்டும் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம்.
எனவே மக்களின் பாதுகாப்புக் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என பிலிப்பின்ஸ் அரசு கூறியது.
செவ்வாய்க்கிழமை காலை வெடித்துச் சிதறிய கன்லாவோன் எரிலை, வானில் 4,000 மீட்டர் உயரத்திற்கு கரும்புகையையும் சாம்பலையும் கக்கியது குறிப்பிடத்தக்கது.