Latestமலேசியா

மலேசியத் தன்னார்வலர்கள் துருக்கியே வழியாக வெளியே கொண்டு வரப்படுவர் – பிரதமர் அன்வார் தகவல்

கோலாலாம்பூர், அக்டோபர்-3 – காசாவுக்கான Global Sumud Flotilla மனிதநேய குழுவில் இடம் பெற்று, இஸ்ரேலியப் படையால் தடுத்து வைக்கப்பட்ட மலேசியத் தன்னார்வலர்கள் அனைவரையும், துருக்கியே நாட்டு வழியாக பாதுகாப்பாக கொண்டு வர மலேசியா கடுமையாக முயன்று வருகிறது.

அவ்விருப்பத்தை துருக்கியே அதிபர் Recep Tayyib Erdogan-னிடம் தாம் தெரிவித்ததாகவும், அதற்கு அவர் ஒப்புதல் அளித்ததாகவும் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

எனவே, இன்னும் ஓரிரு தினங்களில் அவர்கள் இஸ்தான்புல் கொண்டு வரப்பட்டு, பின்னர் மலேசியா திரும்புவர் என்றார் அவர்.

இஸ்ரேலியப் படைகளால் கைதுச் செய்யப்பட்ட துருக்கியே தன்னார்வலர்களுடன் ஒரே விமானத்தில் அவர்கள் அங்கிருந்து வெளியே கொண்டு வரப்படுவர் என அன்வார் சொன்னார்.

இஸ்ரேலியப் படைகளால் தடுத்து வைக்கப்பட்ட அனைத்து 23 மலேசியத் தன்னார்வலர்களும் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் உள்ளதாக, வெளியுறவு அமைச்சான விஸ்மா புத்ரா முன்னதாக உறுதிப்படுத்தியது.

இஸ்ரேலியப் படைகளின் தொடர் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட காசா மக்களுக்குத் தேவையான உணவு, தண்ணீர், மருந்து உள்ளிட்ட பொருட்களை சிறு சிறு கப்பல்கள் மற்றும் படகுகள் வாயிலாக கொண்டுச் செல்வதற்காக, மலேசியா உள்ளிட்ட பன்னாட்டுக் குழுவினர் காசாவை நோக்கி இந்த Flotilla மனிதநேயத் திட்டத்தில் பங்கெடுத்துள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!