Latest
பினாங்கில் 4 பேர் கைது, RM2 மில்லியன் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்

ஜனவரி-4,
பினாங்கில் போலீஸார் நடத்திய அதிரடிச் சோதனையில், 3 உள்ளூர் ஆடவர்களும், ஒரு வெளிநாட்டு பெண்ணும் கைதுச் செய்யப்பட்டனர்.
ஜோர்ஜ்டவுனில் வெள்ளிக்கிழமை மதியம் முதல் சனிக்கிழமை காலை வரை மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில், RM2 மில்லியன் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்டவற்றில் MDMA தூள், கெட்டமின், எக்ஸ்தசி மாத்திரைகள் மற்றும் எரிமின் 5 மாத்திரைகளும் அடங்கும்.
இவை 50,000க்கும் மேற்பட்ட போதைப் பித்தர்களுக்கு போதுமான அளவு என போலீஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் ஜூலை முதல் செயல்பட்டு வந்த கும்பலின் ஓட்டுநர்களாக இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
4 பேரில் மூவர் போதைப்பொருள் உட்கொண்டிருந்ததும் உறுதியானது.
மூவருக்குப் பழையக் குற்றப் பதிவுகளும் உள்ளன.
அனைவரும் 6 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.



