
ஜோர்ஜ்டவுன், செப்டம்பர்-15 – பினாங்கு, ஜோர்ஜ்டவுன் பாயா தெருபோங்கில் (Paya Terubong) உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பின் 21-ஆவது மாடியிலிருந்து விழுந்து, 14 வயது சிறுமி மரணமடைந்தாள்.
நேற்றிரவு 8 மணி வாக்கில் நிகழ்ந்த அச்சம்பவத்தில், அங்காடி கடைகள் அமைந்துள்ள ஆறாவது மாடியில் அவரின் சடலம் பொது மக்களால் கண்டெடுக்கப்பட்டது.
சம்பவ இடம் விரைந்த மருத்துவக் குழு அப்பெண் இறந்து விட்டதை உறுதிப்படுத்தியது.
சவப்பரிசோதனைக்காக சடலம் பினாங்கு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
பட்டவொர்த்தைச் சேர்ந்தவரான அந்தப் பதின்ம வயது பெண், தனது உறவினரைப் பார்ப்பதற்காக அந்த அடுக்குமாடி குடியிருப்புக்குச் சென்றது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
இந்நிலையில் சம்பவத்திற்கான காரணம் விசாரிக்கப்பட்டு வருவதாகக் கூறிய தீமோர் லாவோட் மாவட்ட போலீஸ், தற்போதைக்கு அது திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறிற்று.