
கிள்ளான், டிசம்பர் 21-சிலாங்கூர், கிள்ளானில் நேற்று நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவத்தில், மர்ம நபர் ஒருவர் வங்கியின் கண்ணாடிக் கதவை சுத்தியலால் தாக்கி உடைத்தார்.
பண்டார் புக்கிட் திங்கி, ஜாலான் பத்து நீலாம் சத்துவில் அதிகாலை 5.20 மணிக்கு, trolley-யைத் தள்ளிக் கொண்டு வந்த நபர், வங்கியின் முன் நிற்பது CCTV கேமராவில் பதிவாகியுள்ளது.
திடீரென கையிலிருந்த சுத்தியலை கண்ணாடி கதவு மீது அவர் எறிய, அது உடைந்ததுச் சிதறியது.
கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் அங்கிருந்து தப்பியோடினார்.
7.30 மணிக்கு, வழிப்போக்கர் ஒருவர் உடைந்த கண்ணாடிக் கதவை கவனித்து போலீஸுக்கு தகவல் அளித்தார்.
தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் தற்போது விசாரணை நடத்தி வருகிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் சிறை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.



