Latestமலேசியா

UM முன்னாள் மாணவர்களான அமைச்சர்கள், அறக்கட்டளை நிதிக்கு 10,000 ரிங்கிட் நன்கொடை வழங்க பிரதமர் பரிந்துரை

கோலாலம்பூர், டிசம்பர்-18, மலாயாப் பல்கலைக் கழக முன்னாள் மாணவர்களாக உள்ள அமைச்சரவை உறுப்பினர்கள், UMEF எனப்படும் மலாயாப் பல்கலைக்கழக அறக்கட்டளை நிதிக்கு, தலா 10,000 ரிங்கிட் நன்கொடை வழங்குமாறு பிரதமர் பரிந்துரைத்துள்ளார்.

நாட்டின் அம்மூத்தப் பல்கலைக் கழகத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு அது உதவியாக இருக்குமென, டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

அதே சமயம், 10,000 ரிங்கிட் மற்றும் அதற்கு மேலான மாத வருமானத்தைக் கொண்ட மற்ற முன்னாள் மாணவர்கள், குறைந்தது 1,000 ரிங்கிட்டை நன்கொடையாக வழங்கலாம் என்றார் அவர்.

அது சாத்தியமானால் அரை பில்லியன் ரிங்கிட்டைத் திரட்டி விட முடியுமென பிரதமர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

முன்னாள் மாணவர்களின் இதுபோன்ற நன்கொடைகளால், ஏற்கனவே 1.5 டிரில்லியன் கடனிலிருக்கும் அரசாங்கத்தின் சுமையைக் குறைக்க முடியும்.

எனினும் தாம் அப்படி சொல்வதால், அரசாங்கம் தன் பொறுப்பைத் தட்டிக் கழிப்பதாக அர்த்தமில்லை; ஆனால் நாட்டின் கடன் நிலைமை நம் கைகளைக் கட்டிப் போட்டிருப்பதாக அவர் விளக்கினார்.

Jejak Memori என்ற பெயரில் மலாயாப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கம் நடத்திய இரவு விருந்து நிகழ்வில் உரையாற்றிய போது, அச்சங்கத்தின் புரவலருமான டத்தோ ஸ்ரீ அன்வார் அவ்வாறு சொன்னார்.

UM வேந்தரும் பேராக் சுல்தானுமாகிய சுல்தான் நஸ்ரின் ஷாவும் அவ்விருந்தில் பங்கேற்றார்.

அன்வாரைத் தவிர்த்து, UM முன்னாள் மாணவர்களாக உள்ள அமைச்சர்களில் போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக், பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ அசாலீனா ஒத்மான் சாயிட், வீடமைப்பு-ஊராட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிங், வெளியுறவு அமைச்சர் டத்தோ ஸ்ரீ மொஹமட் ஹசான், தற்காப்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீ காலிட் நோர்டின், மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் ஆகியோரும் அடங்குவர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!