
பெட்டாலிங் ஜெயா, ஜூலை 18 – கடந்த மாதம் UPSI பல்கலைகழகத்தைச் சார்ந்த 15 மாணவர்கள் பயணித்த பேருந்து கெரிக்கிள் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, போக்குவரத்து அமைச்சு சிறப்பு பணிக்குழு ஒன்றை அமைத்து இச்சம்பவம் தொடர்பான விசாரணையை மேற்கொண்டு வந்துள்ளது.
கிழக்கு மேற்கு நெடுஞ்சாலை பகுதியின் கிலோ மீட்டர் 53லிருந்த வளைவுச் சாலையில் அந்த பேருந்து வேக வரம்பை மீறி பயணித்ததால் அது கட்டுப்பாட்டை இழந்து சாலையின் இடது பக்கத்தில் கவிழ்ந்தது என்று சிறப்பு பணிக்குழுவின் ஆய்வறிக்கை குறிப்பிட்டுள்ளது..
வாகனம் இடதுபுறமாக கவிழ்ந்து, பின்னர் பாதுகாப்புத் தண்டவாளத்தில் மோதி, கேபின் இடத்தை ஊடுருவி, பயணிகளிடையே கடுமையான காயங்களையும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரேக் செயலிழப்பு ஏற்பட்டதாக ஓட்டுநர் கூறியிருந்தாலும், புலனாய்வாளர்கள் இதுவரை எந்த இயந்திரக் கோளாறுகளையும் உறுதிப்படுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.