
கோலாலம்பூர் , ஜன 19 – 2026 ஆம் ஆண்டு முதல் 2035 ஆம்ஆண்டு வரையிலான தேசிய கல்வி மேம்பாட்டுத் திட்டத்தின் தொடக்க விழாவில் யூ.பி.எஸ் .ஆர் மற்றும் 3ஆம் படிவத்திற்காக பிடி 3 தேர்வு மீண்டும் தொடங்கப்படுமா என்பது குறித்து அரசாங்கம் நாளை அறிவிக்கும்.
மாணவர்களின் தேவைகள் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறைக்கான திறனைக் கருத்திற் கொண்டு, கல்வித் தரத்தை வலுப்படுத்துவதே இந்த முடிவு நோக்கமாகக் கொண்டுள்ளதாக கல்வி அமைச்சர் பட்லினா சிடெக்( Fadlina Sidek ) தெரிவித்தார்.
முழுமையான மதிப்பீட்டின் மூலம் நமது குழந்தைகள் தயாராக இருப்பதை உறுதி செய்ய வேண்டியிருப்பதால் முழு கற்றல் நடவடிக்கைகளை ஆய்வு செய்வதன் மூலம் மேம்பாடுகளைச் செய்வோம்.
இறுதியில் தரத்தை பற்றிய கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் நாளை எங்களது அறிவிப்பு இருக்கும் என Fadlina சுட்டிக்காட்டினார்.
பள்ளிகளுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான இடைவெளியை முடிவுக்கு கொண்டு வருவதற்கும் , கல்வியில் சமமான அணுகலை உறுதி செய்யும் நோக்கத்தையும் இந்த திட்டம் கொண்டுள்ளதாக இன்று Hot FM மிற்கு அளித்த நேர்க்காணலில் Fadlina கூறினார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு, அம்னோ அதன் பொதுக் கூட்டத்தில் PT3 மற்றும் UPSR தேர்வு மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டுமென அழைப்பு விடுத்தது.



