Latest

VM2026 ; சுற்றுலா தலங்களில் போலீஸ் பாதுகாப்பு வலுப்படுத்தல்

பாயான் லெப்பாஸ், ஜனவரி-4,

“2026 மலேசியாவுக்கு வருகைத் தாருங்கள் ஆண்டு” பிரச்சார இயக்கத்தை முன்னிட்டு நாட்டின் முக்கிய சுற்றுலா தலங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை போலீஸ் மேம்படுத்தவுள்ளது.

சுற்றுப் பயணிகளின் பாதுகாப்பு எப்போதும் முன்னுரிமையாகக் கருதப்படும்; எனவே தேவையான இடங்களில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய போலீஸ் படையின் துணை போலீஸ் தலைவர் தான் ஸ்ரீ ஆயோப் கான் மைடின் பிச்சை தெரிவித்தார்.

மலேசியா, இவ்வாண்டு 43 மில்லியன் வெளிநாட்டு சுற்றுப் பயணிகளை ஈர்க்கும் இலக்கை நிர்ணயித்துள்ளது.

இதற்காக, போலீஸ், விழாக்காலங்கள் மற்றும் பெரும் நிகழ்வுகளின் போது வழக்கமாக மேற்கொள்ளும் பாதுகாப்புக் கட்டுப்பாடுகளை மேலும் வலுப்படுத்துவதாக அவர் சொன்னார்.

இரண்டாவது பினாங்கு பாலத்தில் நடைபெற்ற “PDRM Solidarity Fun Ride 2026” நிகழ்ச்சிக்குப் பிறகு அவர் பேசினார்.

அதில், நிகழ்ச்சியில் பினாங்கு ஆளுநர், முதல்வர் சௌ கோன் யோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!