
பாங்கி, ஏப்ரல்-8,-“Who Wants To Be A Scientist? அறிவியல் போட்டி இவ்வாண்டு மீண்டும் வந்துவிட்டது!
தமிழ்ப் பள்ளி மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தைத் தூண்டும் தேசிய அளவிலான இப்போட்டி, நாட்டின் முதல் நிலை தமிழ் மின்னியல் செய்தி ஊடகமான வணக்கம் மலேசியா இணை ஆதரவில், பாங்கி, மலேசியத் தேசியப் பல்கலைக்கழகமான UKM-மில் நடைபெறுகிறது.
முதல் சுற்று இணையம் வாயிலாகவும், அரையிறுதிச் சுற்று, இறுதிச் சுற்று உள்ளிட்ட போட்டிகள் UKM பல்கலைக்கழகத்தில் நேரடி நிகழ்ச்சியாகவும் நடைபெறும்.
அவற்றுக்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்.
இதன் இணை ஏற்பாடு PERTUBUHAN VETRI, PERTUBUHAN KEBAJIKAN VETHATHIRI MALAYSIA, SKMI UKM மற்றும் MALAYSIAN BIOTECHNOLOGY INFORMATION CENTRE (MABIC) ஆகும்.
நான்காவது முறையாக நடைபெறும் இப்போட்டிக்கு மாணவர்களுக்கு வெறும் 30 ரிங்கிட் கட்டணம் மட்டுமே விதிக்கப்படுகிறது.
பதிவு, போட்டிக்கானச் சுற்றுகள், வெற்றியாளர்களுக்கான பரிசுகள் உட்பட மேற்கொண்டு விவரங்களை வழங்குகிறார், UKM இந்திய மாணவர் பிரதிநிதித்துவச் சபையான PMIKUM-மின் தலைவர் முகேந்திரன் ராமசந்திரன்…
மாணவர்களை அறிவியலை ஆராய ஊக்குவிப்பதோடு, STEM துறைகளில் எதிர்கால விஞ்ஞானிகளை உருவாக்கும் நோக்கத்துடன் இப்போட்டி நடத்தப்படுவதாக, UKM இந்திய மாணவர் பிரதிநிதித்துவச் சபையின் இணை ஆலோசகர் இணைப் பேராசிரியர் Ts. Dr. P. சுஷிதா மேனன் கூறினார்…
“அறிவியலை ஆராயுங்கள், கற்றுக்கொள்ளுங்கள், இளம் விஞ்ஞானியாக பிரகாசியுங்கள்” என்ற கருத்தை வலுயுறுத்தி இளம் அறிவியலாளர்களின் மேடையாக இந்த * “Who Wants To Be A Scientist? 2026 போட்டி அமையவிருக்கிறது
போட்டியில் பங்கேற்ற ஆர்வமுள்ளோர் திரையில் காணும்
link கை கிளிக் செய்யவும்.
அல்லது PMIKUM இன்ஸ்டகிராம் பக்கத்தில் QR குறியீட்டை scan செய்தோ பதிந்துகொள்ளலாம்.
குறிப்பிட்ட இடங்களே இருப்பதால், இன்றே பதிவுக்கு முந்துங்கள்…



