
கோலா தெரெங்கானு, ஜூலை 10 – அண்மையில் ‘அங்காட்’ பாலத்தில் ஆபத்தான முறையில் மிதிவண்டியைச் செலுத்திய சிறார் கும்பலின் காணொளி ஒன்று வைரலானதைத் தொடர்ந்து, போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர் திரெங்கானு காவல்துறைத் தலைவர் டத்தோ முகமட் கைரி கைருதீன் தெரிவித்துள்ளார்.
சைக்கிள் பாகங்களை மாற்றியமைத்தல் மற்றும் ஆபத்தான முறையில் சைக்கிளை ஒட்டி சென்ற அந்த இளைஞர்களைக் கண்டறிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
இந்த வழக்கு போக்குவரத்து விதி மீறல் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படவுள்ளது என்றும் கைதாகவிருக்கும் சந்தேக நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
பிள்ளைகளின் இத்தகைய செயல்களை கவனிக்காத பெற்றோர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் பொதுமக்கள் வருங்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் தொடர்பில் போலீசாரிடம் புகார் அளிக்க வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.