
கோலாலம்பூர், மார்ச் 17 – சுங்கை பீசியில் ஒரு பிரபலமான அடக்குக் கடையில் அடகு வைக்கப்பட்ட தங்கம் மீட்கப்பட்டபோது அது போலியானது என்ற குற்றச்சாட்டு தொடர்பில் போலீஸ் துறை நான்கு புகார்களை பெற்றுள்ளது.
சுங்கை பீசியிலுள்ள அடகுக் கடை வளாகத்தில் மீட்கப்பட்ட தங்கம் தொடர்பாக போலீஸ் துறை நான்கு புகார்களை பெற்றதை செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் முகமது ரொஸ்டி டாவுட் உறுதிப்படுத்தினார்.
மார்ச் 10 ஆம் தேதியன்று மீட்கப்பட்ட தங்கம் போலியானது என்று புகார்தாரர் கூறியதாக அவர் தெரிவித்தார்.
மார்ச் 10 ஆம் தேதியன்று அடகுக் கடை ரசீதுகளை வாங்கும் இரண்டு உள்ளூர்வாசிகளும் மற்றொன்று தங்கத்தின் உரிமையாளர் ஒருவரிடமிருந்து புகார் பெறப்பட்டதாக அவர் கூறினார்.
அடகுக் கடையின் உரிமையாளரின் மேலாளரால் மார்ச் 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் இரண்டு புகார்கள் செய்யப்பட்டன. கடந்த ஆண்டு ஜூலை 28 ஆம் தேதி முதல் செப்டம்பர் 3 ஆம் தேதிவரை சுமார் 225,530 ரிங்கிட் மதிப்புள்ள 19 தங்கக் கட்டிகளை புகார்தாரர் அடகு வைத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது இன்று வெளிட்ட அறிக்கையில் முகமட் ரொஸ்டி குறிப்பிட்டார்.
எனினும் திரும்ப மீட்கப்பட்ட தங்கம் போலியானதாக இருந்ததாக புகார்தாரர் தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த குற்றச்சாட்டை மறுத்து அடகுக்கடை நிறுவனமும் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளது. சம்பந்தப்பட்ட அடகுக் கடை வளாகத்தின் உரிமம் மற்றும் நடவடிக்கை பேங்க் நெகாரா மலேசியாவின் ஒழுங்குமுறைக்கு உட்பட்டிருப்பதால், பிரதான அறிக்கை பேங்க் நெகாரவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மற்ற அறிக்கைகள் அனைத்தும் ஒன்றாக அனுப்பப்பட்டதையும் முகமட் ரொஸ்டி உறுதிப்படுத்தினார்.



