Latestமலேசியா

அதிக வேலைச்சுமையால் அமைச்சர் ஸ்டீவன் சிம் மருத்துவமனையில் அனுமதி

அதிக வேலைச்சுமையால் அமைச்சர் ஸ்டீவன் சிம் மருத்துவமனையில் அனுமதி

ஜார்ஜ்டவுன், பிப்ரவரி 20 –

தொழில் முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் ஸ்டீவன் சிம், கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியான பணிச்சுமையால் ஏற்பட்ட கடுமையான சோர்வு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சீனப் புத்தாண்டின் நான்காம் நாளில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டதாக அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

மருத்துவர் தம்மை சில காலம் ஓய்வு எடுக்க அறிவுறுத்தியுள்ளார் என்றும் விரைவில் குணமடைந்து மீண்டும் வலிமையுடன் திரும்புவதாகவும் அவர் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அவரது ஊடக அதிகாரி ஒருவர் கூறுகையில், ஸ்டீவன் சிம்மின் குடும்பத்தினர் அவரது உடல்நிலை பற்றிய விரிவான தகவலை வெளியிடவில்லை என்றாலும், இது கடுமையான சோர்வால் ஏற்பட்டதாக நம்பப்படுகின்றது என்று தெரிவித்தார்.

மேலும் அவரது நிலைமை கவலைக்கிடமானது அல்ல என்றும் மிகவும் சோர்வடைந்ததால் ஓய்வு தேவைப்படுகிறது என்றும், முழுமையான ஓய்வு வழங்க குடும்பத்தினர் விரும்புகின்றனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!