
கோலாலம்பூர், அக்டோபர்-15,
பெரிக்காத்தான் நேஷனலுக்கு ஆதரவாக ஒன்று சேர்ந்துள்ள எதிர்க்கட்சிகளின் தளர்வான புதிய கூட்டணிக்கு ‘இக்காத்தான் பிரிஹாத்தின் ரக்யாட்’ அல்லது சுருக்கமாக IPR (Ikatan Prihatin Rakyat – IPR) என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமரும் பெரிக்காத்தான் நேஷனல் தலைவருமான தான் ஸ்ரீ முஹிடின் யாசின் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
“IPR என்பது ஆட்சியில் புறக்கணிக்கப்பட்ட மக்களின் குரலை பிரதிநிதித்துவப்படுத்தும் மாற்று அரசியல் தளம் ஆகும்”
‘இது இன்னும் தளர்வான அமைப்பாக இருந்தாலும், பொற்றுப்பேற்றல், சமூக நலன் மற்றும் மாற்றுக் கொள்கைகள் ஆகியவற்றில் ஒன்றுபட்ட அரசியல் குரலை உருவாக்குவது இதன் நோக்கம்’ என முஹிடின் சொன்னார்.
இந்தக் கூட்டணி விரைவில் தனது பொதுக் கொள்கையையும் அரசியல் திசையையும் வெளியிடவுள்ளது.
நேற்றையக் கூட்டத்தில், MIPP தலைவர் பி.புனிதன் உள்ளிட்ட பெரிக்காத்தான் தலைவர்களோடு, உரிமைக் கட்சியின் தலைவர் பேராசிரியர் Dr. பி.ராமசாமி, MAP கட்சித் தலைவர் பி. வேதமூர்த்தி ஆகியோரும் பங்கேற்றனர்.
இவ்வேளையில் பெயர் மாற்றம் போதாது, ‘இக்காத்தான் பிரிஹாத்தின் ரக்யாட்’ உண்மையில் மக்களின் ஆதரவைப் பெறுமா என்பதே முக்கியம் என விமர்சகர்கள் கூறுகின்றனர்.