
கோலாலம்பூர், ஜூலை 17 – டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்குப் பதில் பிரதமராக பதவியேற்க தான் வேட்பாளராகக் கூறப்படுவது குறித்து Datuk Seri Johari Abdul Ghani மறுத்துள்ளார்.
ஒற்றுமை அரசாங்கத்தின் நிலைத்தன்மையை சீர்குலைக்க வேண்டாம் என்று அம்னோ உதவித் தலைவரும் தித்திவாங்சா நாடாளுமன்ற உறுப்பினருமான அவர், அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொண்டார்.
இந்தப் பதவிக்கு அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து ஆதரவு பெற்றதாக எழுந்த செய்தியை தோட்ட மற்றும் மூலப்பொருள் அமைச்சருமான Johari நிராகரித்தார்.
அம்னோவில் 26 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே இருக்கும்போது தாம் பிரதமராக நியமிக்கப்படுவதற்கு எப்படி ஆதரவு இருக்க முடியும் என அவர் வினவினார்.
ஒற்றுமை அரசாங்கம் அமைதியாகவும் நிலைத்தன்மையாகவும் இருக்கிறது.
எனவே அதன் நிர்வாகத்தை சீர்குலைத்து விடவேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டார்.
உங்களுக்கு அதிருப்தி இருந்தால் அடுத்த பொதுத் தேர்தல்வரை பொறுத்திருங்கள் என இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் Johari வலியுறுத்தினார்.