Latestமலேசியா

அம்பாங் ஜெயாவில் SPUMI விளக்கக் கூட்டம்; 140 இந்தியத் தொழில்முனைவோர் பங்கேற்பு

அம்பாங், மார்ச்-17-இந்தியத் தொழில்முனைவோர்களுக்கான கடனுதவித் திட்டமான SPUMI குறித்த விளக்கக் கூட்டமொன்று அண்மையில் அம்பாங் ஜெயா நகராண்மைக் கழக கோபுரத்தில் நடைபெற்றது.

140 இந்திய தொழில்முனைவோர் மற்றும் வருங்கால தொழில்முனைவோர் அதில் பங்கேற்றனர்.

தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு (KUSKOP) அமைச்சர் ஸ்டீவன் சிம் தலைமையில், இந்தியச் சமூக தொழில்முனைவோருக்கு நிதி உதவி மற்றும் வணிக வளர்ச்சி வாய்ப்புகளை விரிவுபடுத்தும் முயற்சியாக இது அமைந்தது.

இந்த SPUMI மாநில சுற்றுப்பயணத்தின் முதல் இடமாகத் அம்பாங் ஜெயா தேர்ந்தெடுக்கப்பட்டது.

இதன் மூலம், உள்ளூர் தொழில்முனைவோர் நேரடியாக அரசாங்கத்தின் நிதிந்த் திட்டங்கள் மற்றும் வணிக மேம்பாட்டு முயற்சிகள் குறித்து அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

இந்த நிகழ்ச்சியில், மாநில மற்றும் உள்ளூர் தலைவர்கள், சமூக பிரதிநிதிகள் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!