
அலோர் காஜா, ஜூலை 7 – நேற்றிரவு மலாக்கா அலோர் காஜாவில் 15 மாத பெண் குழந்தை ஒன்று சித்ரவதையால் மரணமடைந்ததைத் தொடர்ந்து, 24 வயது தாயும் அவரது காதலனும் கைதாகியுள்ளனர்.
இரவு 11 மணியளவில் சுயநினைவற்ற நிலையில், அக்குழந்தையை அத்தாய் நெகிரி செம்பிலானில் உள்ள தம்பின் மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளார்.
பரிசோதித்ததில், அக்குழந்தையின் உடலில் காயத்தின் தளும்புகள் இருந்ததோடு, கொண்டு வரும்போதே, அக்குழந்தை இறந்திருந்தது.
இதனைத் தொடர்ந்து, மருத்துவமனை போலிசுக்கு தகவல் கொடுக்க, போலிசார் தாயையும் காதலனையும் கைது செய்துள்ளனர்.
விசாரணையில், தம்பினிலிருந்து தன் காதலனைப் பார்க்க Pulau Sebangகிற்கு குழந்தையை அழைத்துச் சென்றதாகவும், பின்னர் இரவு 10 மணியளவில் குழந்தையை தூங்க வைத்து காதலனின் மேற்பார்வையில் விட்டுவிட்டு உணவு வாங்க வெளியே போனதாக கூறியுள்ளார் அப்பெண்.
தொடர்ந்து இரவு 10.30 மணியளவில் வீடு திரும்ப குழந்தையை எழுப்பியபோது அது சுயநினைவற்ற நிலையில் இருந்தததால் மருத்துவமனைக்கு அழைத்து வந்ததாக கூறியுள்ளார்.
இதனிடையே உடலில் ஏற்பட்ட காயங்களினால்தான் அக்குழந்தை இறந்திருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ள நிலையில் உடல் சவப்பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து போலிஸ் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.