Latestமலேசியா

அலோர் காஜாவில் ஆணுறுப்பைக் காட்டிய ஆடவரை அடித்தே கொன்ற பொது மக்கள்; 7 பேர் கைது

அலோர் காஜா, ஜூலை-29- மலாக்கா, அலோர் காஜாவில் பொது இடத்தில் தனது ஆணுறுப்பைக் காட்டி அநாகரீகமாக நடந்துகொண்ட 51 வயது ஆடவர் பொதுமக்களால் அடித்தே கொல்லப்பட்டார்.

நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு மேல் அச்சம்பவம் நிகழ்ந்தது. ஒரு பேரங்காடிக்கு வெளியே கார் நிறுத்துமிடத்தில் அவ்வாடவர் அவ்வாறு நடந்துகொண்டதால் சினமடைந்த பொது மக்களில் சிலர் அவரைத் துரத்திச் சென்றனர்.

Jalan Bestari பக்கமாக ஓடியவரைப் பிடித்து 2 ஆடவர்கள் தாக்கினர்; அவர்களிடமிருந்து தப்பித்து புதர்ப்பகுதிக்கு ஓடிய அந்நபர் பின்னர் ஆற்றில் குதித்தார்.

எனினும் கரையைத் தாண்டியதுமே பொது மக்களிடம் மீண்டும் சிக்கி சரமாரியாகத் தாக்கப்பட்டவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து விசாரணையில் இறங்கிய போலீஸ், ஒரு பாகிஸ்தானிய ஆடவர் உள்ளிட்ட 7 பேரை கைதுச் செய்தது.

அவர்கள் அனைவரும் 7 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டனர்.

கொல்லப்பட்ட ஆடவர், இதே போன்று பொது இடங்களில் அநாகரீகமாக நடந்துகொண்டதால் ஏற்கனவே 2 குற்றப்பதிவுகளைக் கொண்டவர் என மலாக்கா போலீஸ் கூறியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!