Latestமலேசியா

அல் குர்ஆனை மிதித்த புகைப்படம் வைரல்; UMPSA மாணவர் கைது

குவாந்தான், பிப்ரவரி-25-UMPSA எனப்படும் மலேசிய பஹாங் அல் சுல்தான் அப்துல்லா பல்கலைக்கழக மாணவர் ஒருவர், இஸ்லாத்தை அவமதித்ததாகக் கூறி இன்று அதிகாலை போலீஸாரால் கைதுச் செய்யப்பட்டார்.

இஸ்லாமியர்களின் புனித நூலான அல் குர்ஆனை மிதித்து அதன் புகைப்படத்தையும் நபிகள் நாயகத்தை அவமதிக்கும் கருத்துக்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டதற்காகவும் அந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரிக்க இன்று நீதிமன்ற ஆணைப் பெறப்படுமென, பஹாங் போலீஸ் தலைவர் டத்தோ ஸ்ரீ Yahaya Othman கூறினார்.

குற்றவியல் சட்டம் மற்றும் தொடர்பு – பல்லூடகச் சட்டத்தின் கீழ் இச்சம்பவம் விசாரிக்கப்படுகிறது.

இதனிடையே, 3R எனப்படும் இனம், மதம், ஆட்சியாளர்களை நிந்திக்கும் அல்லது வெறுப்பைத் தூண்டும் எந்தக் கருத்துடனும் சமரசம் செய்யமாட்டோம் என UMPSA பல்கலைக்கழகம் வலியுறுத்தியுள்ளது.

அவ்வகையில் உள் விசாரணையும் நடைபெற்று, சம்பந்தப்பட்ட மாணவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் கட்டொழுங்கு விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அது எச்சரித்தது.

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!