
ஆப்பிரிக்கா கென்யா, அக்டோபர் -29 ,
ஆப்பிரிக்கா கென்யா மசாய் மாறா (Maasai Mara) தேசிய பூங்காவை நோக்கிச் சென்ற ஒரு சிறிய சுற்றுலா விமானம் ஒன்று, நேற்று காலை க்வாலே (Kwale) பகுதியில் விழுந்து நொறுங்கியதில், விமானி உட்பட மொத்தம் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உயிரிழந்த பயணிகளில் எட்டு பேர் ஹங்கேரி (Hungary) ,நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும், இருவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் அறியப்படுகின்றது.
விபத்து ஏற்படுவதற்கு முன்னதாக, அவ்விமானம் கென்யாவின் தெற்குக் கடற்கரையான டியானி விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, பிரபல சுற்றுலா தலமான கிச்சுவா தெம்போவை (Kichwa Tembo) நோக்கிச் சென்றுகொண்டிருந்தது என்று கென்யா விமானப் போக்குவரத்து அதிகாரசபை (KCAA) தெரிவித்தது,.
மேலும் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களுக்குப் பிறகு விமானி கட்டுப்பாட்டு மையத்துடன் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டதாக அறியப்படுகின்றது.
பின்னர், விமானம் வெடித்து எரிந்து நொறுங்கியதாகவும், சம்பவ இடத்தில் விமானத்தின் பகுதிகள் யாவும் பரவியிருந்ததாகவும் அதிகாரிகள் கூறினர். இவ்விபத்தின் காரணம் குறித்து கென்யா அதிகாரிகள் தற்போது விரிவான விசாரணையை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..



