Latestமலேசியா

ஆராய்ச்சி பல்கலைக்கழகங்களில் உள்ளூர் மாணவர்கள் புறக்கணிப்பா? உயர் கல்வி அமைச்சு மறுப்பு

புத்ராஜெயா, செப்டம்பர்-18,

மலேசியாவின் ஆராய்ச்சி பல்கலைக்கழகங்களில் அனைத்துலக மாணவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுவதாக, ஜித்ரா சட்டமன்ற உறுப்பினர் Haim Hilman Abdullah கூறிய குற்றச்சாட்டை, உயர் கல்வி அமைச்சு மறுத்துள்ளது.

உள்ளூர் மாணவர்கள் எப்போதும் முன்னுரிமை பெறுவார்கள் என்றும், அவர்களை ஒருபோதும் அமைச்சு புறக்கணித்தது கிடையாது என்றும் உயர் கல்வி தலைமை இயக்குநர் Azlinda Azman தெளிவுப்படுத்தினார்.

அந்த சட்டமன்ற உறுப்பினர் தொடர்ந்து பொது மக்களை தவறாக வழிநடத்துவதாகவும் Azlinda குற்றம் சாட்டினார்.

5 ஆராய்ச்சி பல்கலைக்கழகங்களில் உள்ள 180,000 இடங்களில் 21 விழுக்காட்டை அனைத்துலக மாணவர்கள் பிடித்துள்ளனர் என Haim முன்னதாகத் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்த Azlinda, உண்மையில் இளங்கலைப் பட்டப்படிப்பு நிலையில் 91.6% உள்ளூர் மாணவர்களும், 8.4% மட்டுமே அனைத்துலக மாணவர்களும் உள்ளனர் என விளக்கினார்.

இளங்கலைப் பட்டப்படிப்புகளுக்கான உதவித்தொகைகள் முழுவதும் உள்ளூர் மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுவதாகவும் அவர் சொன்னார்.

2024 டிசம்பர் நிலவரப்படி, UM, UKM, UPM, USM, UTM ஆகிய அந்த 5 ஆராய்ச்சி பல்கலைக்கழகங்களில் மொத்தம் 180,024 மாணவர்கள் உள்ளனர்.

அவர்களில் 79% உள்ளூர் மாணவர்கள், 21% அனைத்துலக மாணவர்கள்.

இதுவே, முதுகலைப் படிப்பு நிலையில் அனைத்துலக மாணவர்களுக்கு வரம்பில்லை – காரணம் இது பல்கலைக்கழகங்களின் தரத்தையும், உலகளவில் புகழையும் உயர்த்துகிறது எனவும் Azlinda கூறினார்.

எனவே இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்புக்கான தரவுகளை மொத்தமாக சேர்த்து மதிப்பீடு செய்வது முறையல்ல என்றார் அவர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!