Latestமலேசியா

ஆற்றில் பாய்ந்த பெரோடுவா அல்சா; மூவர் படுகாயம்

ஜோர்ஜ்டவுன், ஜூலை-7 – பினாங்கு, ஜோர்ஜ்டவுன், சுங்கை ஆயிர் தெர்ஜுனில் பெரோடுவா அல்சா MPV வாகனம் ஆற்றில் விழுந்ததில், நால்வர் காயமடைந்தனர்.

அவர்களில் மூவர் பெண்களாவர்.

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நிகழ்ந்த அச்சம்பவத்தில் MPV கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டு கடைசியில் ஆற்றில் கவிழ்ந்தது.

வாகனத்தின் உள்ளே சிக்கிக் கொண்ட நால்வரையும், சிறப்புக் கருவிகளைப் பயன்படுத்தி தீயணைப்பு மீட்புத் துறையினர் பாதுகாப்பாக வெளியே மீட்டனர்.

54 வயது Rashidah Bee Shaikh Mydin, 59 வயது Fatimah Beevi PM Mydin, 63 வயது Mydin Fatimah PM Mydin மூவரும் படுகாயம் அடைந்தனர்; MPV ஓட்டுநரான 64 வயது Mohd Barak Abdul Latiff சிராய்ப்புக் காயங்களுக்கு ஆளானார்.

நால்வரும் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!