
பாங்கி, ஜூலை 17- PSV எனப்படும் பொது சேவை வாகனம் மற்றும் GDL எனப்படும் சரக்கு ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்களின் உரிமங்கள் இடைநிறுத்தப்பட்டவர்களுக்கு மறுவாழ்வுப் பயிற்சியை சாலைப் போக்குவரத்துத் துறை அறிமுகப்படுத்தும் என அதன் தலைமை இயக்குநர் டத்தோ ஏடி பாட்லி ரம்லி ( Aedy Fadly Ramli) தெரிவித்தார்.
இந்தப் பயிற்சி அறிமுகப்படுத்தப்பட்டதும், இடைநிறுத்தப்பட்ட PSV மற்றும் GDL உரிமங்கள் உள்ளவர்களுக்கு கட்டாயமாக்கப்படும். வாகன உரிமங்களை வைத்திருப்பதற்கான அவர்களின் தகுதி பரிசீலிக்கப்படுவதற்கு முன்பு அவர்கள் இந்தப் பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறினார். இந்தப் பயிற்சி எதிர்வரும் நவம்பர் மாதத்திற்குள் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.