
அமெரிக்கா, ஜூலை 25 – அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூகிள் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற பெரிய நிறுவனங்கள், இந்தியா உட்பட பிற வெளிநாடுகளிலிருந்து தொழில்நுட்ப வல்லுநர்களை பணியமர்த்துவதை தவிர்க்க வேண்டுமென்று கூறியுள்ளார்.
மாறாக உள்நாட்டில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் அதிக அமெரிக்கர்களை வேலைக்கு அமர்த்துவதிலும் தனி கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.
அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்நாட்டுச் சுதந்திரத்தைப் பயன்படுத்தி அதிக லாபம் ஈட்டியுள்ளனர் என்றும் ஆனால் வெளிநாடுகளில் அதிக முதலீடு செய்துள்ளன என்றும் ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்காவிற்கு ஆதரவாக அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் இருக்க வேண்டுமே தவிர வெளிநாடுகளுக்கு தங்களின் முழு ஆதரவை வழங்குவது ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய அறிவுறுத்தல் AI நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்றும்
செயற்கை நுண்ணறிவு என்ற வார்த்தையை காட்டிலும் தொழில்நுட்பத்தின் நுண்ணறிவு பெயரை அவர் வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட AI கருவிகளின் ஏற்றுமதியை ஊக்குவிப்பதன் மூலமும், அமெரிக்காவிற்குள் AI இன் முழு அளவிலான வளர்ச்சியை ஆதரிப்பதன் மூலமும் உலகளவில் அமெரிக்கா போட்டியிட இயலும் என்று ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.