
கோலாலம்பூர், நவ 28 – இந்தியாவில் நீப்பா வைரஸ் பரவியதைத் தொடர்ந்து அது தொடர்பான அறிக்கையை சுகாதார அமைச்சு தற்போது கண்காணித்து வருகிறது.
அண்மைய தொற்று நோயின் தரவுகளை உறுதிப்படுத்த , உலக சுகாதார நிறுவனமான (WHO) மற்றும் தொடர்புடைய அதிகாரிகளுடன் சுகாதார அமைச்சு நேரடி தொடர்பில் உள்ளது என சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுல்கெப்ளி அகமட் ( Dzulkefly Ahmad ) தெரிவித்தார்.
நாட்டின் நுழைவு மையங்களில் மக்களின் பாதுகாப்பு, அனைத்துலக விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் தரைவழி நுழைவு மையங்களில் பணியாற்றும் அதிகாரிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகின்றனர்.
தீவிர சுகாதார கண்காணிப்பு, பயணிகள் மற்றும் சுற்றுப்பயணிகளுக்கு கடுமையான பரிசோதனையுடன் , எந்தவொரு அறிகுறி உள்ள நபர்களுக்கும் உடனடி நடவடிக்கை நெறிமுறைகள் மற்றும் முழு எச்சரிக்கையுடன் அவசர மருத்துவக் குழுக்கள் எப்போதும் தயார் நிலையில் செயல்பட்டு வருவதாக Dzulkefly இன்று X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மனிதர்கள், விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு இடையிலான தொடர்பை கண்காணிப்பதன் மூலம் சுகாதார அணுகுமுறை மிகவும் முக்கியமானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். நாங்கள் அறிவியலின் அடிப்படையில் செயல்படுகிறோம்.
நாட்டின் சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பு வலுவானது, உறுதிப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் தயாராய் உள்ளது என்பதை பொதுமக்களுக்கு Dzulkefly வலியுறுத்தினார்.



