Latestமலேசியா

இந்துக்களை இழிவுப்படுத்தும் வகையில் grab ஓட்டுநரின் அநாகரீகப் பேச்சு; வைரலாகும் சம்பவம்

கோலாலம்பூர், ஏப்ரல்-22,  P-hailing எனப்படும் உணவு அனுப்பும் சேவையில் ஈடுபட்டுள்ள ஒரு மலாய்க்காரப் பெண்மணி,, வாடிக்கையாளரான இந்து பெண்ணிடம் இனவாதமாக பேசிய சம்பவம் வைரலாகியுள்ளது.

பாதிக்கப்பட்டவரான அமுதா என்பவர் தனது Instagram post-யில் இதனை அம்பலப்படுத்தியுள்ளார்.

ஞாயிற்றுக் கிழமை_grab food_ மூலமாக குவைத்தியாவ் ஆர்டர் செய்தவருக்கு, சொல்லியபடி உணவு வந்து சேரவில்லை.

இதையடுத்து அந்த grab ஓட்டுநருக்கு அச்செயலி வழியாக தகவல் அனுப்பி அமுதா விவரம் கேட்டுள்ளார்.

ஆனால், Yamaha NMAX 155 மோட்டார் சைக்கிளில் வந்த Nur Fathin Syuhadah Binti Mohd Latif எனும் அந்த grab ஓட்டுநர் தகாத வார்த்தைகளால் அதுவும் இந்து மதத்தை இழிவுப்படுத்தும் வகையில் திட்டி பதில் அனுப்பினார்.

இது குறித்து அமுதா grab நிறுவனத்திடம் புகாரளித்தார்.

ஆனால் ஒரு வாடிக்கையாளர் என்ற முறையில் கேட்ட கேள்விக்கு, பொறுப்பான எந்த பதிலும் வரவில்லை; இதுவே அமுதாவுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

பின்னர் உரிய ஆதாரங்களுடன் போலீஸிலும் புகார் செய்தார்.

எனினும், அதற்கு சரியான பதில் வராததால், மலேசியத் தொடர்பு – பல்லூடக ஆணையமான MCMC-யிடமும் அமுதா புகார் செய்துள்ளார்.

MCMC இவ்விவகாரத்தைக் கடுமையாகக் கருதி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்;

மின்னியல் சாதனங்கள் அனைத்து மலேசியர்களுக்கும் பாதுகாப்பானதாக இருக்க, இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழக் கூடாது என்றும் அமுதா தனது புகாரில் கூறியுள்ளார்.

அமுதாவின் Instagram post-யை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

தாங்களும் இதே பெண் கிராப் ஓட்டுனராலி இதே போன்ற கசப்பான அனுபவங்களைச் சந்தித்திருப்பதாக அவர்களில் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

அதே சமயம், வாடிக்கையாளர்களை சம்பந்தப்பட்ட p-hailing நிறுவனம் கண்டுகொள்ளாமல் உதாசீனப்படுத்துவது கடுமையாகக் கருதப்பட வேண்டிய விஷயமாகும் என்றும் பலர் சாடியுள்ளனர்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!