Latestஅமெரிக்காஉலகம்சிங்கப்பூர்

இந்தோனீசியாவில் ஆடவரின் மர்ம உறுப்பை கௌவிய விஷப்பாம்பு

ஜகார்த்தா, ஜனவரி-26 – பாம்புகள் பொதுவாக கையில் கடிக்கும் அல்லது காலில் கடிக்கும்.

ஆனால்
இந்தோனீசியாவின் காட்டுப் பகுதியில் மலையேறும் நடவடிக்கையின் போது விஷப் பாம்பொன்று தனது மர்ம உறுப்பை கௌவியதால், ஓர் ஆடவர் கலகலத்து போன சம்பவம் வைரலாகியுள்ளது.

Anggara Shoji எனும் அந்நபர் Instagram-மில் அவ்வீடியோவைப் பதிவேற்றியுள்ளார்.

ஆணுறுப்பை கௌவிய பாம்பை அவர் கையால் இழுத்து தள்ள முயன்றும், அது முடியவில்லை.

பாம்பு கெட்டியாக பிடித்துகொண்டதால் வலி தாங்காது அவர் உட்கார்ந்தே விட்டார்.

பலங்கொண்டு பாம்பை அவர் தொடர்ந்து இழுத்த போதும் அது தனது பிடியை விடவில்லை.

பாம்பை அவர் முதலில் கையில் பிடித்தாரா அல்லது அதுவாக அவர் மீது ஏறியதா எனத் தெரியவில்லை.

வீடியோவைப் பார்த்தவர்களில் பலர் அதிர்ச்சியும் ஆச்சரியமும் தெரிவித்த நிலையில், நகைச்சுவையான கருத்துக்களுக்குப் பஞ்சமில்லை.

அவருக்கும் பாம்புக்குமான போராட்டத்தில் கடைசியில் என்னவானது என தகவல் இல்லை.

அவ்வீடியோ இதுவரை 25.6 மில்லியனுக்கும் மேற்பட்ட views-களைப் பெற்றுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!