
ஜகார்த்தா, ஏப்ரல் 23: இந்தோனேசியா ஜாவாவிலுள்ள செமேரு எரிமலை நேற்று செவ்வாய்க்கிழமை 4 முறை வெடித்து, அதன் உச்சியிலிருந்து 800 மீட்டர் வரை சாம்பலைக் கக்கியதாக எரிமலையியல் மற்றும் புவியியல் மையமான PVMBG தெரிவித்துள்ளது.
காலை மணி 5.55க்கு முதல் வெடிப்பு ஏற்பட்டு, அதைத் தொடர்ந்து காலை மணி 6.30க்கும், 8.41க்கும் மற்றும் மதியம் 12.08க்கும் அடுத்த வெடிப்புகள் தொடர்ந்தன என்று செமேரு எரிமலை கண்காணிப்பு மையத்தின் அதிகாரி யாடி யூலியாண்டி கூறினார்.
இந்த அபாயத்தையடுத்து, லுமாஜாங் மற்றும் மலாங் எல்லையில் அமைந்துள்ள 3,676 மீட்டர் உயரமுள்ள எரிமலை, இப்போது இரண்டாம் நிலை அபாயத்தில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது