
ஜகர்த்தா, ஜூலை 7 – இந்தோனேசியாவின் கிழக்குப் பகுயில்
Lewotobi Laki Laki எரிமலை வெடித்ததில் வானத்தில் சுமார் 18 கிலோமீட்டர் உயரமுள்ள ஒரு மூடிய சாம்பல் கோபுரத்தை வானத்தில் கக்கியது.
பிரபலமான சுற்றுலா உல்லாச தளத்தில் ஏற்கனவே எரிமலை குமுறியதால் ஏற்பட்ட பாதிப்பினால் 12க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்ட சில வாரங்களுக்குப் பின் மீண்டும் இப்படியொரு சம்பவம் ஏற்பட்டுள்ளது.
Llores சுற்றுலாத் தீவில் உள்ள 1,584 மீட்டர் உயரம் கொண்ட Lewotobi எரிமலை உள்நாட்டு நேரப்படி இன்று காலை மணி 11.05க்கு வெடித்தாக எரிமலை பேரிடர் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
Lewotobi எரிமலையின் உச்சியிலிருந்து ஏற்பட்ட குமுறலினால் சுமர் 18,000 மீட்டர் உயரத்திற்கு கரும்புகைகள் சூழ்ந்து காணப்பட்டது. ஆற்றோரத்திற்கு அருகே மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் கனத்த மழை பெய்தால் எரிமலையினால் வெளியேறிய சாம்பல் சுற்றுப்புற பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய சகதி வெள்ளமாக உருவாகும் சாத்தியம் இருப்பதாகவும் பொதுமக்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது.