
புத்ராஜெயா, ஜனவரி-8 – ஆயுதப் படையின் முன்னாள் தளபதி, ஜெனரல் தான் ஸ்ரீ Muhammad Hafizuddeain Jantan, அவரது இரு மனைவிகளுடன் புத்ராஜெயாவில் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.
தரைப்படையின் கொள்முதல் குத்தகைத் திட்டங்கள் வழங்கப்பட்டதில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் முறைகேடு தொடர்பில், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC அவர்களைக் கைதுச் செய்தது.
புத்ராஜெயா MACC அலுவலகத்தில் வாக்குமூலம் அளிக்கச் சென்ற போது அவர்கள் கைதானதை, MACC தலைமை ஆணையர் தான் ஸ்ரீ அசாம் பாக்கி உறுதிப்படுத்தினார்.
மூவரையும் தடுத்து வைக்க இன்று நீதிமன்ற ஆணைப் பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hafizuddeain டிசம்பர் 28-ஆம் தேதியே MACC-யிடம் வாக்குமூலம் அளித்திருக்க வேண்டும்; ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் அவரால் அவ்வாறு செய்ய முடியவில்லை.
இதே வழக்கில், 2.4 மில்லியன் ரிங்கிட் பணத்தை தூக்கிக் கொண்டு ஓட முயன்றதன் பேரில் மற்றொரு தம்பதியரும் கைதுச் செய்யப்பட்டு 7 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஐவருக்கெதிரான விசாரணை தீவிரமாக நடைபெறுவதாக அசாம் பாக்கி கூறினார்.
விசாரணைக்கு உதவுவதற்காக Hafizuddeain மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்குச் சொந்தமான 6 வங்கிக் கணக்குகள் ஏற்கனவே முடக்கப்பட்டுள்ளன.



