Latestமலேசியா

இஸ்தானா நெகாராவில் 7 அமைச்சர்கள், 8 துணை அமைச்சர்கள் பதவியேற்பு

கோலாலாம்பூர், டிசம்பர் 17-மடானி அமைச்சரவைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 7 அமைச்சர்களும் 8 துணையமைச்சர்களும் இன்று காலை 10 மணிக்கு இஸ்தானா நெகாராவில் பதவியேற்றனர்.

சிங்காசனா கெச்சில் மண்டபத்தில் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் தலைமை நீதிபதி வான் அகமத் பாரிட் வான் சாலே சாட்சியாக இருந்தனர்.

புதிய அமைச்சர்கள் முறையே
1. மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஆர்தர் ஜோசப் குருப், தோட்டத் தொழில் மற்றும் மூலப் பொருள் அமைச்சர் டத்தோ ஸ்ரீ நொராய்னி அஹ்மாட், பொருளாதார அமைச்சர் அக்மல் நஸ்ருல்லா முஹமட் நாசிர், – பிரதமர் துறை (சபா & சரவாக்) அமைச்சர் டத்தோ முஸ்தபா சக்முட், பிரதமர் துறை (மத விவகாரங்கள்) அமைச்சர் சுல்கிஃப்லி ஹசான், இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் Dr முஹமட் தாஃபிக் ஜொஹாரி ஆவர்.

புதிய துணை அமைச்சர்களில் தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சுக்கு நியமிக்கப்பட்டுள்ள செகாமாட் நாடாளுமன்ற உறுப்பினஃப்ர் ஆர். யுனேஸ்வரனும் அடங்குவார்.

அனைவரும் பதவிப் பிரமாணம், அரச விசுவாசம் மற்றும் இரகசியக் காப்பு பிரமாணம் எடுத்து நியமன ஆவணங்களில் கையெழுத்திட்டனர்.

இது பிரதமர் அன்வார் செய்துள்ள இரண்டாவது அமைச்சரவை மாற்றமாகும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!