Latestமலேசியா

ஈரான் மீது 2,000 பவுண்ட் எடையிலான ‘பங்கர்-பஸ்டர்’ வெடிகுண்டு தாக்குதல்; வீடியோ பகிர்ந்த ட்ரம்ப்

இஸ்ஃபஹான், மார்ச்-31-ஈரானின் இஸ்ஃபஹான் (Isfahan) நகரில், அமெரிக்கா–இஸ்ரேல் தாக்குதலால் ஏற்பட்ட பெரும் வெடிப்புகள் நகரம் முழுவதும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளன.

குறிப்பாக 2,000 பவுண்ட் எடையுள்ள bunker buster குண்டுகள் ஆயுதக் கிடங்கில் வீசப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் தொடர்ச்சியான வெடிப்புகள், தீப்பந்தங்கள் வானில் பறந்தன.

இரவு நேரத்தில் நடத்தப்பட்ட இந்த வெடிப்புகளின் காட்சி எனக் கூறி, அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் தனது Truth Social சமூக ஊடகத் தளத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

ஆனால் வீடியோவின் உண்மைத் தன்மை இன்னும் உறுதிச் செய்யப்படவில்லை.

இந்த ‘பங்கர்-பஸ்டர்’ குண்டுகள் நாம் நினைப்பதுபோல் சாதாரண குண்டுகள் அல்ல ; மாறாக, நிலத்தடியில் அல்லது பாதுகாப்பாக அமைக்கப்பட்ட கட்டடங்களைக் கூட உடைத்துச் சென்று பெரும் சேதாரத்தை ஏற்படுத்தும் ‘பயங்கர’ குண்டாகும்.

தலைநகர் தெஹ்ரானுக்கு தெற்கே அமைந்துள்ள இஸ்ஃ பஹான், ஈரானிய இராணுவ மற்றும் அணுத் திட்டங்களில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

இங்கு தான் யுரேனியம் செரிவூட்டல் அணு ஆய்வு மையங்கள் உள்ளன; தவிர விமான உற்பத்தி மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை தயாரிக்கும் தொழிற்சாலைகளும் உள்ளன.

ஈரானின் பாதுகாப்பு அமைப்பின் முக்கியமாக இஸ்ஃபஹான் கருத்தப்படுவதாலேயே, அமெரிக்கா இந்த 2,00 பவுண்ட் எடை கொண்ட பங்கர் படர் குண்டை அங்கு வீசியுள்ளது.

ஈரான், 540 கிலோ உயர்தர யூரேனியத்தை ஏற்கனவே இஸ்ஃபஹானில் உள்ள நிலத்தடி நிலையங்களுக்கு மாற்றியுள்ளதாக நம்பப்படும் வேளை, நிலத்தடி நடவடிக்கைகள் மூலம் அந்த யூரேனியத்தை கைப்பற்ற வாஷிங்டன் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அமைதி ஒப்பந்தத்திற்கு ஈரான் இணங்கா விட்டால், எண்ணெய் மற்றும் எரிசக்தி வளங்களை முற்றிலுமாக தகர்ப்போம் என ட்ரம்ப் எச்சரித்த ஒரே நாளில், இந்த ‘சம்பவத்தை’ அமெரிக்கா அரங்கேற்றியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!