
சிரம்பான் , செப் 25 –
உள்நாட்டு பெண்ணுக்குச் சொந்தமான ஏடிஎம் அட்டையை வைத்திருந்ததற்காகவும், நாட்டில் அதிக காலம் தங்கியிருந்ததற்காகவும் நைஜீரிய ஆடவர் ஒருவர் மீது இன்று சிரம்பான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
38 வயதான உடோ இமே, ( Udoh Imeh ) மாஜிஸ்திரேட் நூருல் சகினா ரோஸ்லி ( Nurul Saqinah Rosli ) முன்னிலையில் வாசிக்கப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளையும் மறுத்தார்.
இருப்பினும், அவரது இரண்டு நண்பர்களான நைஜீரியாவைச் சேர்ந்த 39 வயதுடைய ஹென்ட்ரி சினோன்சோ உடெம்பா ( Hendry Chinonso Udemba) மற்றும் கானாவைச் சேர்ந்த 49 வயதுடைய எரிக் ஒனுமா (Eric Onumah ) ஆகியோர் , நாட்டில் அதிக காலம் தங்கியிருந்த குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
தண்டனைச் சட்டத்தின் பிரிவு 424A யின் கீழ் , செப்டம்பர் 8 ஆம் தேதி பிற்பகல் மணி 2.20க்கு ,நீலாய் பங்சாபுரி தேசா பால்மாவில், 44 வயதுடைய உள்நாட்டுப் பெண்ணின் உரிமைகளைப் பெறுவதைத் தடுக்கும் நோக்கில், உடோ வங்கி ஏடிஎம் அட்டையை வைத்திருந்தார்.
இந்த குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால் 5,000 ரிங்கிட் முதல் 50,000 ரிங்கிட்வரை அபராதம் அல்லது ஆறு மாதங்கள் முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
இவர் மீதான குற்றச்சாட்டு அக்டோபர் 29 ஆம்தேதி மறுவாசிப்புக்கு செவிமடுக்கப்படும். இதனிடேயே Hendry மற்றும் Erick கிற்கு 10,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டதோடு அதனை செலுத்தத் தவறினால் ஆறு மாதம் சிறைத்தண்டனை அனுபவிக்கும்படி உத்தரவிடப்பட்டது.