
கோலாலாம்பூர், ஆகஸ்ட்-4 – 2028 மார்ச் மாதத்திற்குள் நாட்டின் 125 நுழைவாயில்களில் 635 ‘autogate’ தானியங்கி கதவுகள் பொருத்தப்படும்.
எல்லைப் பாதுகாப்பு குறிப்பாக வெளிநாட்டினர் மலேசியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைவதைத் தடுப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நாசூத்தியோன் இஸ்மாயில் மக்களவையில் இன்று அதனை தெரிவித்தார்.
இதன் மூலம் நுழைவாயில்களில் மனித தொடர்புகளைக் குறைத்து, டிஜிட்டல் மயமாக்கல் மேம்படுத்தப்படுமென்றார் அவர்.
இவ்வாண்டு டிசம்பர் தொடங்கி KLIA 1, KLIA 2 விமான முனையங்களிலும், கூச்சிங் அனைத்துலக விமான நிலையம், கோத்தா கினாபாலு அனைத்துலக விமான நிலையம், பினாங்கு அனைத்துல விமான நிலையம், ஜோகூரின் சுல்தான் அபு பாக்கார் வளாகம் மற்றும் சுல்தான் இஸ்கண்டார் கட்டடத்தில் இந்த ‘autogate’ பொருத்தப்படும்.
இந்த ‘autogate’ முறையில் biometric எனப்படும் கைவிரல் ரேகைப் பதிவுகள், முக அடையாளம், கருவிழி அங்கீகாரம் போன்றவை பயன்படுத்தப்படுவதால், நுழைவாயில்களில் முறைகேடுகளை ஆக்கப்பூர்வமாகக் கையாள முடியும் என சைஃபுடின் சொன்னார்.