ஷா ஆலாம், செப்டம்பர் -14, ஷா ஆலாம் மாநகரின் முக்கிய அடையாளங்களின் ஒன்றான ஷா ஆலாம் விளையாட்டரங்கத்தை தரைமட்டமாக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
அவ்வகையில் நேற்று அதன் இரண்டாவது மேற்கூரை வெடி வைத்து தகர்க்கப்பட்டது.
30 ஆண்டுகளாக பல்வேறு நிகழ்வுகளுக்கு சாட்சியாகத் திகழ்ந்த அவ்வரங்கின் கூரை சரிந்து விழும் காட்சிகள் வைரலாகி நெட்டிசன்களின் கவனத்தைப் பெற்றுள்ளன.
கம்பீரமாகத் திகழ்ந்த அரங்கம் சரிவது கண்டு நெட்டிசன்கள் பலர் கவலைத் தெரிவித்ததோடு, பல நினைவலைகளும் பகிர்ந்துக் கொண்டனர்
கூரைகள் முழுவதுமாக சரிந்திருப்பதை அடுத்து, அரங்கை இடிக்கும் பணிகள் அடுத்தக் கட்டத்தை நோக்கி நகருகின்றன.
80,372 பேர் அமரக் கூடிய ஷ ஆலாம் அரங்கத்தைஇடிக்கும் பணிகள் கடந்த ஜூலை மாதம் தொடங்கின.
அங்கு புதிதாக ஷா ஆலாம் விளையாட்டு வளாகம் என்ற பெரிய அரங்கம் அமைக்கப்படவுள்ளது.