Latest
கம்போங் புக்கிட் செராக்காவில் தனிநபர் வசமிருந்த பாத்திக் மலைப்பாம்பு பறிமுதல்

சுபாங் – ஆகஸ்ட்-28 – சுபாங், கம்போங் புக்கிட் செராக்காவில் (Bukit Cherakah) 1,500 ரிங்கிட் மதிப்பிலான உயிருள்ள பாத்திக் வகை மலைப்பாம்பொன்று பறிமுதல் செய்யப்பட்டு சீல் வைக்கப்பட்டது.
வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசியப் பூங்காங்கள் துறையான PERHILITAN மற்றும் புக்கிட் அமான் மத்திய சேமப்படையினர் இணைந்து அச்சோதனையை நடத்தினர். 2010 வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்டதான அந்த மலைப்பாம்பு, உரிமையாளரது தளத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
சம்பவ இடத்தில் 42 வயது பெண்ணிடம் அறிமுகப்படுத்திக் கொண்டு அதிகாரிகள் சோதனையிட்ட போது, பாம்பு சிக்கியது.
பறிமுதல் செய்யப்பட்ட அந்த ஊர்வன மேல் நடவடிக்கைக்காக PERHILITAN அலுவலகம் கொண்டுச் செல்லப்பட்டது.
உரிமையாளர் வெளிநாட்டில் இருப்பதால் விசாரணை அறிக்கைத் திறக்கப்படவில்லை என போலீஸ் கூறியது.