கராம் சிங் வாலியா காலமான 38வது நாளில் மூத்த மகளும் மரணம்; அதிர்ச்சியில் குடும்பத்தினர்

சிரம்பான், மே-16,
நாட்டின் மூத்த புலனாய்வு செய்தியாளர் டத்தோ கராம் சிங் வாலியாவின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினர், தற்போது மற்றொரு பேரிழப்பைச் சந்தித்துள்ளனர்.
கராம் சிங் காலமான 38-ஆவது நாளில், அவருடைய மூத்த மகளான சரண்ஜித் கவுர் வாலியா (Sharonjit Kaur Walia) காலமானார் என்ற அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.
44 வயதான சரண்ஜித், சிரம்பான், சிக்காமாட்டில் உள்ள அவரது இல்லத்தில் தூக்கத்திலேயே உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அவருக்கு கடுமையான உடல்நலக் குறைபாடுகள் எதுவும் இல்லை என அவரது கணவர் காஷ்மிந்தர் சிங் சந்து (Kashminder Singh Sandhu) தெரிவித்தார்.
போர்டிக்சன் பாலிடெக்னிக்கில் மூத்த ஆங்கில விரிவுரையாளராகப் பணியாற்றிய சரண்ஜித், சக ஊழியர்களாலும் மாணவர்களாலும் மிகவும் நேசிக்கப்பட்ட ஒரு சிறந்த கல்வியாளராகத் திகழ்ந்தார்.
மறைந்த சரண்ஜித்திற்கு கணவரும், 6 மற்றும் 10 வயதில் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.



