
கிள்ளான், அக்டோபர் 28 –
சபாக் பெர்ணாமில் தனது கர்ப்பிணி காதலியை கொன்று உடலை எரித்த குற்றத்தில் மரணதண்டனை விதிக்கப்பட்ட 22 வயது மதிக்கத்தக்க முகமட் ஃபக்ருல் ஐமான் சஜாலி (Muhammad Fakrul Aiman Sajali) தண்டனையைக் குறைப்பதற்காக மேல்முறையீடு செய்துள்ளான்.
அக்டோபர் 20 ஆம் தேதியன்று நீதிமன்றத்தில் தண்டனையை மீளாய்வு செய்வதற்கு மனு தாக்கல் செய்யப்பட்டதென்று குற்றவாளி தரப்பு வழக்கறிஞர் குறிப்பிட்டார்.
அக்டோபர் 15 அன்று, அந்த ஆடவன் தனது கர்ப்பிணி காதலியைத் திட்டமிட்டு கொன்றுள்ளான் என்பதை நீதிமன்றம் நிரூபித்து தூக்கிலிடும் மரணதண்டனை விதித்தது.
பாதுகாப்பு தரப்பு வாதத்தில், வேதியியல் துறையின் DNA பரிசோதனையில் கருவில் இருந்த குழந்தை ஃபக்ருலின் குழந்தையல்ல என்பது குறிப்பிடப்பட்டது.



