
ஜகார்தா, ஜூலை 8 – கடந்த வெள்ளிக்கிழமை, ஜகார்த்தா சுலவேசி பகுதியில், சில நாட்களுக்கு முன்பு காணமால் போன 61 வயது விவசாயி ஒருவர், ஐந்து மீட்டர் நீளமுள்ள மலைப்பாம்பின் வயிற்றில் இறந்து கிடப்பதை அறிந்த அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
காணாமல் போன அந்த பெரியவரின் நிலத்திற்கு அருகில், உடல் வீங்கிய தோற்றத்தில் மலைப்பாம்பொன்று அசைவற்று இருப்பதைக் கண்ட கிராமவாசிகளுக்கு மிகுந்த சந்தேகம் ஏற்பட்டு காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.
.
தேடுதல் நடவடிக்கையின் போது பிடிபட்ட அந்த மலைப்பாம்பின் வயிற்றைச் சம்பந்தப்பட்ட துறையினர்கள் வெட்டி பார்த்த போது, அதனுள் அந்த முதியவர் முழு உடையணிந்து சடலமாக இருந்ததைக் கண்டறிந்துள்ளனர்.
இறந்தவரின் உடல் பாகங்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு அன்றே அவரது இறுதி சடங்கையும் நடத்தியுள்ளனர்.
இந்தக் கொடூரமான கண்டுபிடிப்பின் காட்சிகள் பின்னர் வைரலாகி, சமூக ஊடகங்களில் பரவி, உள்ளூர் மக்களின் அனுதாபத்தையும் அதிர்ச்சியையும் பெற்று வருகின்றது.