
கோலாலம்பூர் – ஜூலை 16 – காராக் நெடுஞ்சாலையில் 35.1 ஆவது கிலோமீட்டரில் Genting Sampah – Gombak கில் கூடாரங்களை ஏற்றிச் சென்ற லோரியில் தீப்பிடித்தது. காலை மணி 7.24 அளவில் இச்சம்பவம் குறித்து அவசர அழைப்பு கிடைத்தாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் நடவடிக்கைக்கான துணை இயக்குநர் அமகமட் முக்லிஸ் மொக்தார் ( Ahmad Mukhlis Mokhtar ) தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து செலாயாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த 10 பேர் கொண்ட குழு, சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது. கூடாரங்களை ஏற்றிச் சென்ற 10 டன் எடையுள்ள லாரியில் ஏற்பட்ட தீ விபத்தில் 90 சதவீதம் சேதமடைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது என்று Ahmad Mokhlis வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார். இத்தீக்கான காரணத்தை கணடறிவற்காக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.