காரில் 3.8 கிலோ போதைப்பொருள் சிக்கியது; சிங்கப்பூரில் மலேசிய ஆடவர் கைது

சிங்கப்பூர், செப்டம்பர்-25 – 37 வயது மலேசிய ஆடவர் ஒருவரை சிங்கப்பூர் அதிகாரிகள் துவாஸ் சோதனைச் சாவடியில் கைதுச் செய்துள்ளனர்.
அவரது காரில் சுமார் 3.8 கிலோ கிராம் எடை கொண்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அவற்றின் மதிப்பு 394,000 சிங்கப்பூர் டாலருக்கும் அதிகமாகும்.
பறிமுதல் செய்யப்பட்டவற்றில், 1,908 கிராம் ஹெரோயின், 1,655 கிராம் கஞ்சா மற்றும் 268 கிராம் ‘ஐஸ்’ வகை போதைப்பொருளும் அடங்கும்.
இவை, 1,300க்கும் மேற்பட்ட போதைப்பித்தர்களின் ஒரு வார பயன்பாட்டுக்கான போதுமான அளவாகும்.
சோதனையில், முதலில் காரின் பின்புற boot பகுதியில் 2 கருப்பு பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
பின்னர் காரினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த மேலும் 6 பொட்டலங்கள் சிக்கின.
சம்பவம் தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் கூறினர்.
சிங்கப்பூரில், போதைப்பொருள் தவறான பயன்பாடு சட்டத்தின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், சந்தேக நபர் மரண தண்டனைக்கு உள்ளாகலாம்.