Latestமலேசியா

கார் கண்ணாடிக்கு வெளியே ‘துப்பாக்கி’ நீட்டிய ஆடவர் கைது

கூச்சிங், ஜூன்-20 – சரவாக் கூச்சிங்கில் வாகனமோட்டும் போது கார் கண்ணாடிக்கு வெளியே airsoft gun இரக கைத்துப்பாக்கி போன்றதொருப் பொருளை நீட்டி வைரலான ஆடவர் கைதாகியுள்ளார்.

சாலை சந்திப்பில் அவர் அந்த கைத்துப்பாக்கியை கையில் வைத்து அசைப்பது வேறொரு காரோட்டியால் வீடியோவில் பதிவுச் செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அவரது வீட்டில் சோதனையிட்ட பிறகு அவர் கைதான வேளை கைத்துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டதாக சரவாக் போலீஸ் தலைவர் Mancha Ata கூறினார்.

விசாரணை அறிக்கைத் திறக்கப்பட்டிருப்பதையும் அவர் உறுதிப்படுத்தினார்.

arsoft gun துப்பாக்கி என்பது airsoft விளையாட்டுகளுக்குப் பயன்படுத்தப்படும்
பொம்மை துப்பாக்கிகள் ஆகும்.

போலியே என்றாலும் சுடும் ஆயுதங்கள் வைத்திருப்பது சட்டப்படி குற்றமாகும்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் ஒராண்டு சிறையும் 5,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்படலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!