Latestமலேசியா

கிக் தொழிலாளர் சட்டம் மார்ச் இறுதிக்குள் அமுல் – ரமணன் உறுதி

கோலாலாம்பூர், ஜனவரி-26-கிக் தொழிலாளர்களுக்கான சட்டம் (Akta Pekerja Gig) வரும் மார்ச் இறுதிக்குள் அமுலுக்கு வரும் என மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக பரவிய தகவல்களில் கூறப்பட்டது போல் மே 1-ஆம் தேதி அல்ல என்றார் அவர்.

இவ்வேளையில், e-hailing நிறுவனமான Grab, அதன் அனைத்து ஓட்டுநர்களுக்குமான PERKESO பங்களிப்பை 15% ஆக உயர்த்த ஒப்புக்கொண்டுள்ளது.

இது கிக் தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பை மேம்படுத்தும் முக்கியமான கட்டமாக ரமணன் வருணித்தார்.

இது தவிர, இவ்வாண்டுக்குள் 5,000 தொழிலாளர்களுக்கு பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு வாய்ப்புகளையும் Grab வழங்கவுள்ளதாக அவர் சொன்னார்.

மற்றொரு நிலவரத்தில், e-hailing ஓட்டுநர்களின் ஒவ்வொரு பயணத்திற்கும் நிலையான குறைந்தபட்ச கட்டணம் அல்லது harga lantai நிர்ணயிப்பது குறித்து அரசாங்கம் இன்னும் பரிசீலிக்கவில்லை என ரமணன் தெரிவித்தார்.

அனைத்து தளங்களின் செலவினமும் இலாப விகிதமும் ஒரே மாதிரி இல்லை என்பதே அதற்கு காரணம் என்றார் அவர்.

ஒரே மாதிரி தரத்தை நிர்ணயித்தால், சில நிறுவனங்களின் ‘செலவுத் தாங்கும்’ திறன் பாதிக்கப்படலாம்.

இது நேரடியாக வேலை வாய்ப்புகளைக் குறையச் செய்து, கடைசியில் கிக் தொழிலாளர்களே பாதிக்கப்படும் நிலைக்கு இட்டுச் செல்லும் என அவர் எச்சரித்தார்.

தற்போதுள்ள RM1,700 குறைந்தபட்ச சம்பளக் கொள்கை தொடர்ந்து கடைபிடிக்கப்படும்.

ஆனால் ஓட்டுநர்களின் பயணக் கட்டணத்தை நிர்ணயிக்கும் பொறுப்பு ஒவ்வொரு தளத்திற்கும் தனித்தனியாக உள்ளது; அவர்கள் சட்டத்திற்கு உட்பட்டு நடக்கும் வரையில் பிரச்னை இல்லை என்றார் அவர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!