
பெட்டாலிங் ஜெயா, டிசம்பர் 19 – ஹலால் சான்றிதழ் பெற்ற உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களில் கிறிஸ்துமஸ் அலங்காரங்களுக்கு தடை விதிக்கப்பட்டதாக கூறப்படுவதற்கு, அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் Dr Akmal Saleh எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
கிறிஸ்துமஸ் அலங்காரங்கள் உணவின் ஹலால் நிலையை என்றுமே பாதிக்காது என அவர் திட்டவட்டமாக கூறினார்.
உணவு மற்றும் பானங்கள் ‘Haram’ மூலங்களில் இருந்து வராதவரை, அவை Halal வரையறைக்குள் உட்பட்டவை என்றும் கிறிஸ்துமஸ் . அலங்காரங்களுக்கும் halal-க்கும் எவ்வித தொடர்புமில்லை என்றும் அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இதையடுத்து, மலாக்கா இஸ்லாமிய மத விவகாரங்கள் துறை (JAIM) வெளியிட்டதாக கூறப்படும் சுற்றறிக்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அந்த சுற்றறிக்கையில், கிறிஸ்துமஸ் ஒரு மத விழா என்பதால் மலாக்காவில் ஹலால் சான்றிதழ் பெற்ற ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் கிறிஸ்துமஸ் அலங்காரங்கள் அனுமதிக்கப்படாது என்றும், அவை ஹலால் சான்றிதழ் பெறாத பகுதிகளில் மட்டும் வைக்கப்பட வேண்டுமென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.



