கிள்ளான், செப்டம்பர்-30, ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழையால் சிலாங்கூர், கிள்ளானில் பல பகுதிகளில் திடீர் வெள்ளமேற்பட்டது.
தீபாவளிக்குத் தயாராகி வரும் ஜாலான் தெங்கு கிளானா, லிட்டல் இந்தியாவும் அவற்றிலடங்கும்.
வெள்ள நீர் மிக வேகமாக ஏறி, பல கடைகளுக்குள் புகுந்து விட்டது.
நல்லவேளையாக சீக்கிரமாகவே அது வற்றியும் விட்டதாக, லிட்டல் இந்தியா வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் சார்ல்ஸ் மாணிக்கம் தெரிவித்தார்.
தீபாவளிக்குப் பொருட்களை வாங்க வந்து வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட பலர் பதிவேற்றிய வீடியோக்களைப் பார்த்தால், வெள்ள நீர் மட்டம் 0.3 மீட்டராக இருந்துள்ளது.
நாட்டில் வழக்கமாக தீபாவளிக்கு ஒரு மாதத்திற்கு முன்பே களைக்கட்டி விடும் வர்த்தகப் பகுதிகளில் கிள்ளான் லிட்டல் இந்தியாவுக்கு முக்கிய இடமுண்டு.