
கிள்ளான், மார்ச்-30-கிள்ளானில் மற்ற வாகனங்களை முந்திச் செல்லும் முயற்சியில் எதிர் திசையில் புகுந்து அதிவேகத்தில் சென்ற கார் மோதி, 30 வயது மோட்டார் சைக்கிளோட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.
நேற்று காலை Jalan Barat Daya-விலிருந்து கிள்ளான் மாநகரை நோக்கி மிகவும் ஆபத்தான முறையில் வந்த கார், எதிரே வந்த மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளியது.
மோட்டார் சைக்கிளோட்டி அதில் தூக்கி வீசப்பட்டு, இன்னொரு காரின் மேல் போய் விழுந்த காட்சிகள் வைரலாகி நெஞ்சை பதற வைக்கின்றன.
கடுமையான காயங்களால் 30 வயது அவ்வாடவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்தை ஏற்படுத்திய 20 வயது காரோட்டி கைதுச் செய்யப்பட்ட நிலையில், அவர் மது போதையிலும் போதைப்பொருள் மயக்கத்திலும் இருந்ததை போலீஸார் உறுதிப்படுத்தினர்.
அவர் விசாரணைக்காகக் தடுத்து வைக்கப்படுகிறார்.
மது போதையில் வாகனமோட்டுவது உயிருக்கே ஆபத்து என தெரிந்திருந்தும், பொறுப்பற்றவர்களின் செயலால் இப்படி தொடர்ந்து உயிர் பலி ஏற்படுவது பெரும் கவலையை ஏற்படுத்துகிறது.



