
கிள்ளான், ஆகஸ்ட்-4-கிள்ளான், தாமான் தெலுக் கெடுங் இண்டாவில் தெரு நாய் ஒன்றைப் பிடிக்கும் போது ஏற்பட்ட சம்பவத்தில், மாநகர மன்ற அதிகாரிகள் உரிய SOP நடைமுறைகளைச் சரியாகப் பின்பற்றியே செயல்பட்டதாக, கிள்ளான் அரச மாநகர மன்ற மேயர் டத்தோ Abd Hamid Hussain தெரிவித்துள்ளார்.
அங்கு நடத்தப்பட்ட நடவடிக்கையின் போது அதிகாரிகள் 12 நாய்களைப் பாதுகாப்பாகப் பிடித்தனர்.
ஆனால், 13-ஆவது நாயைப் பிடிக்கும் போது, அது தன்னுடைய நாய் எனக் கூறி அப்பகுதி வாழ் மக்களில் ஒருவர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அந்தச் சிக்கலின் போது நாய் எதிர்பாராதவிதமாகக் கழுத்து நெரிக்கப்பட்டு உயிரிழந்ததாக அவர் விளக்கியுள்ளார்.
இந்தச் சம்பவம் விலங்கு நல ஆர்வலர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதிகாரிகளின் பாதுகாப்பு மற்றும் விலங்குகளைப் கையாளும் முறையைச் சமநிலையில் பேண வேண்டியதன் அவசியத்தை மேயர் சுட்டிக் காட்டியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து போலீஸ் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.



