Latestமலேசியா

குடும்ப உறுப்பினர்களின் MyKad பயன்படுஎரிபொருள் வாத்தி மானிய ங்குவது சட்டவிரோதம்; JPN எச்சரிக்கை

கோலாலம்பூர், ஏப்ரல்-6-குடும்ப உறுப்பினர்களின் MyKad பயன்படுத்தி மானிய விலையிலான எரிபொருள் வாங்குவது சட்டவிரோதமாகும் என, தேசிய பதிவிலாகாவான JPN எச்சரித்துள்ளது.

MyKad என்பது தனிப்பட்ட அடையாள அட்டை; குடும்ப உறுப்பினர்களாகவே இருந்தாலும் கூட, அதை மற்றவர்களுக்கு கொடுத்து பயன்படுத்த அனுமதிப்பது சட்டத்திற்கு எதிரானதாகும்.

எனவே, மற்றவர்களின் MyKad அட்டைகளைப் பயன்படுத்தி எண்ணெய் நிரப்புவதை தடுப்பதன் மூலம், அரசாங்கம் வழங்கும் எரிபொருள் மானியத் திட்டங்களில் தவறான பயன்பாட்டை தடுக்க முடியுமென JPN கூறியது.

குறிப்பாக RON95 மானியம் உண்மையிலேயே தகுதிப் பெற்றவர்களுக்கே சென்றடைய வேண்டும்.

இப்படியான தவறான பயன்பாட்டில் ஈடுபட்டால் அபராதம் அல்லது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொது மக்கள் தங்களுடைய MyKad அட்டைகளை மற்றவர்களுக்கு வழங்காமல், சட்டத்தைப் பின்பற்றி நடக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முன்னதாக, கிளந்தானில் ஓர் ஆடவர் 4 MyKad அட்டைகளைப் பயன்படுத்தி 100 லிட்டருக்கும் மேல் RON95 பெட்ரோலை வாங்கியதால் கைதுச் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!