ஈப்போ, டிசம்பர்-23 – பேராக், குவாலா கங்சார் அருகே பாடாங் அம்பாங், சுங்கை கம்போங் புன்தியில் அடையாளம் தெரியாத ஆடவரின் சடலம் பொது மக்களால் கண்டெடுக்கப்பட்டது.
தொடக்கக் கட்ட பரிசோதனையில் உடலில் காயங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை.
ஆக அம்மரணத்தில் குற்ற அம்சங்கள் எதுவும் இருப்பதற்கான சாத்தியங்கள் இல்லையென, குவாலா கங்சார் போலீஸ் தலைவர் Heisham Harun கூறினார்.
என்றாலும் சவப்பரிசோதனைக்காக சடலம் குவாலா கங்சார் மருத்துவமனையின் தடயவியல் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அச்சம்பவம் குறித்து தகவல் தெரிந்த பொது மக்கள் போலீசைத் தொடர்புக் கொண்டு உதவுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.